Breaking
Mon. Nov 25th, 2024

-ஊடகப்பிரிவு-

முஸ்லிம் அரசியலில் எம்மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் மக்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்துவனவாக அமையும். இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஐந்து உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றும் வாய்ப்புண்டு என்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும்இ முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமுமான எம்.ரி. ஹஸனலி உறுதிப்படத் தெரிவித்தார்.

நிந்தவூரிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

முஸ்லிம்களின் உரிமைகளுக்காகவும், எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்காகவும் ஆணித்தரமாகக் குரல் கொடுத்து தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டிய முஸ்லிம் காங்கிரஸ், கடந்த 17 வருட காலமாக மக்களை ஏமாற்றிகொள்கை கோட்பாடுகளின்றி செயற்பட்டு வருவது மக்களை விசனத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

பெரும் தலைவர் மர்ம்ஹூம் அஷ்ரப்பிற்குப் பின்னர் இன்றைய தலைமை, தலைவர் அஷ்ரபின் கொள்கை, கோட்பாடுகள், வழிகாட்டல்களைப் புறந்தள்ளி தனிமனித அராஜகத்தையே அரங்கேற்றி வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெரு இயக்கம் தலைவர் அஷ்ரப்பின் மறைவுக்குப் பின்னர் பலகையுடன் மட்டும் கொண்ட வெற்றுக் கடை போன்றே உள்ளது.

கடந்த 17 வருட காலமாகஇ குறிப்பாக வடக்குஇ கிழக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் உருப்படியான தீர்வுகளை எட்டுவதற்கான செயற்பாடுகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை புறமொதுக்கிய வண்ணமேயுள்ளது.

உச்சக்கட்ட அரசியல் அதிகாரத்தை தன்னகத்தே  அமைச்சுப் பதவி, பிரதி அமைச்சுப்பதவிகள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைகள் என முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிருந்தும் எவற்றுக்கும் தீர்வுகாணாது, 90வீதம் ஊழல் நிறைந்த அபிவிருத்தி பற்றியே பேசிக்கொண்டிருக்கும் நிலையுள்ளது. பெருந்தேசியக் கட்சிகளிடம் முஸ்லிம்களையும், முஸ்லிம் தேசிய உரிமைப் போராட்டத்தையும் தாரை வார்த்துவிட்டு சுகபோகம் அனுபவிக்கும் தனிப்போக்கில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமை முஸ்லிம் இரசியல் பயணத்தை திசை திருப்பியுள்ளது.

இந்த தனிமனித அராஜக செயற்பாடுகள் மற்றும் மக்களை மறந்த அரசியல் நிலைப்பாடுகள் குறித்து மக்கள் இன்று விழிப்படைந்துள்ளனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலுள்ள புத்திஜீவிகள் சமூகத்தை அவலநிலைக்கு இட்டுச்சென்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ்pனதும்இ அதன் வெற்றுத் தலைமையினதும் ஏமாற்று வித்தைகளை நன்கு புரிந்து கொண்டு வெகுண்டெழுந்து வருகின்றனர்.

எனவேதான் முஸலிம் அரசியலில் பாரிய மாற்றத்தை மக்கள் மட்டுமன்றிஇ புத்தி ஜீவிகளும் எதிர்பார்த்துள்ளனர். இதன் காரணமாகவே இன்றைய முக்கிய காலகட்டமான உள்ளுராட்சித் தேர்தல் காலத்தை இந்த எதிர்பார்க்கப்படும் மாற்றத்திற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்துவதற்கு மக்கள் தயாராகியுள்ளனர்.

இதன் வெளிப்பாடாக இன்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பக்கம் மக்கள் அணிதிரண்டு வருகின்றனர். எம்முடன் இணைந்துள்ள மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்தில் ஐந்து உள்ளுராட்சி சபைகளை ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வென்றெடுக்கும் வாய்ப்பைத் தருமென்ற நம்பிக்கையுடனுள்ளதுடன் ஏனைய இடங்களிலும் கணிசமான வெற்றிவாய்ப்பைப் பெறவுள்ளோம். இந்த நிலைமை முஸ்லிம் அரசியலில் பாரிய மாற்றத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகள் முஸ்லிம் காங்கிரஸினர்தான் என்ற எண்ணப்பாட்டுடன் செயற்படுவதாகத் தெரிகிறது.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸுடன் மட்டும் பேசினால் போதுமென்பது கூட்டமைப்பினரின் எண்ணமாக இருக்கலாம்.  ஆனால், நடைபெறவிருக்கும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஏற்படப்போகும் மாற்றத்தின் பின்னர் எவருடன் முஸ்லிம்கள் தொடர்பில் பேசவேண்டுமென்பதை அவர்கள் புரிந்துகொள்வர். மாற்றம் நிச்சயம் வரும்.

எமது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு 12 முக்கிய அம்சங்கள் குறித்து உடன்பாட்டுடன் ஏற்படுத்தப்பட்டது. இக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் தேர்தலின் பின்னரும் தெர்ர்வதுடன்இ இக்கட்டமைப்புடன் இணைந்துகொள்ள விரும்பும் முஸ்லிம் கட்சிகள்இ அமைப்புக்களை விட்டுக்கொடுப்புக்களுடன் இணைத்துக்கொள்ளவும் தயாராகவேயுள்ளோம். தனிமனித ஆதிக்கத்திலிருந்தும் வழிதவறிச் செல்லும் பாதையை விட்டும் முஸ்லிம் காங்கிரஸையும் மரச் சின்னத்தையும் மீட்டெடுக்கும் எமது போராட்டம் தேர்தலின் பின் தொடரும் என்றார்.

Related Post