Breaking
Sun. Dec 22nd, 2024

– எம்.எம்.ஜபீர் –

அம்பாரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஏற்படட காலநிலைமாற்றத்தினால் பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் 6ஆம் கொளனி பிரதேசத்தில் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரயாணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதேவேளை மழை தொடர்ந்து பெய்துவருவதால் பிரதேசத்திலுள்ள வயல் வெளிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ் பிரதேசத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றது

By

Related Post