Breaking
Mon. Dec 23rd, 2024

ஏ.எச்.எம்.பூமுதீன்

அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம.கா வெற்றி பெறும். அந்தக் கட்சிக்கு ஒரு ஆசனம் உறுதி என முன்னாள் அமைச்சரும் தே.கா தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸின் மருதமுனை மத்திய குழுவினரை அக்கரைப்பற்றில் வைத்து சந்தித்து உரையாடும்போதே மேற்கண்ட கருத்தை உறுதியாக தெரிவித்துள்ளார்.

அ.இ.ம.கா அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் என்பது இறுதிவரை எதிர்பார்க்கப்படாத ஒரு விடயம். எனினும், அக்கட்சி தனித்து களமிறங்கியுள்ளமை மு.கா.வுக்கு உண்மையில் சவால்தான்.

அ.இ.ம.கா அம்பாறையில் போட்டியிடுவதை நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என மு.கா. வேட்பாளர்கள் கருத்து வெளிப்படுத்த முனைவது உண்மையில் அ.இ.ம.கா. வின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துகின்றது.

அ.இ.ம.கா. அம்பாறை மாவட்டத்தில் 20 ஆயிரம் தனி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும். அதன் மூலம் அக்கட்சி ஓர் ஆசனத்தை பெறும்.

அதேபோன்று அதாவுல்லாவாகிய நானும் வெற்றி பெறுவேன். நான் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்களின் போதும் நான் தோற்று விடுவேன் தோற்று விடுவேன் என்று கூறுவர். இம்முறையும் அவ்வாறே கூறுகின்றனர். ஆனால் இன்சா அல்லாஹ் வெற்றி பெற்றே ஆகுவேன். எமது வியூகம் வெல்லும் என்று கூறியுள்ளார்.

Related Post