அம்பாறை மாவட்டத்தில் நிலவும் வெப்பமான கால நிலையினால் நீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. கடந்த இரண்டு மாத காலமாக மழைவீழ்ச்சி கிடைக்காதன் காரணமாக மலைப் பிரதேச காடுகள் வரண்டு காணப்படுவதினால் வன ஜீவராசிகள் நீர் உணவு தேடி மக்கள் குடியிருப்பு பிரதேசங்களில் அலைந்து திரிகின்றன. நீர்நிலைகள் வற்றியதால் முதலைகளும் வெளியே வந்துள்ளன.