Breaking
Sat. Nov 23rd, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லா

ஆட்சி மாற்றமொன்று தேவையென்று மக்கள் கருதிய போது அவர்களின் அந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் எமக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களை தூக்கி எறிந்துவிட்டு சமூகத்தின் பாதுகாப்பு கருதி 71 உறுப்பினர்களுடன் வெளிவந்த முதலாவது கட்சி என்ற வகையில்,மைத்திரி அலையின் பிரதான பங்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொண்டுள்ளதாக தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கிழக்கு மக்களின் எதிர்கால பாராளுமன்ற பிரதி நிதி;த்துவத்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் எமது அணியுடன் இணையுமாறும் அழைப்பு விடுப்பதாவும் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வுகள்,மட்டக்களப்பு,அம்பாறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம் பெற்றுவருகின்ற நிலையில் அட்டாளைச்சேனையில் நேற்று இரவு இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று எமது மக்களுக்கு தேiவாயனது அரசியல் ஒற்றுமையாகும்.மாபெரும் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் உருவாக்கிய கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அனுபவமும்,எமது இந்த சிறிய கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் தோற்றத்தின் குறுகிய காலத்தின் செயற்பாடுகளையும் வெளிச் செல்லுகையின் பெறுமானத்தையும் நீங்கள் இன்று ஒப்பிட்டுபாருங்கள்.

குறிப்பாக இந்த நாட்டு ஒட்டு மொத்த முஸ்லிம்கள் எதனை எதிர்பார்த்து நிற்கின்றார்கள் என்ற பார்வையினையே நாம் கொண்டுள்ளோம்.கட்சிகள் என்பது மதம் அல்ல,இந்த கட்சிகள் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதில் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றது.மக்களுக்கு சரியானதொரு பாதையினை காண்பிப்பதற்காக தான் கட்சிகள் என்ற நிலை இருக்க வேண்டுமே ஒழிய அதற்காக மக்களை பலிக்கடாக்களாக ஆக்கும் நிலையினை கட்சிகள் ஏற்படுத்தக் கூடாது.

இந்த கிழக்கு மாகாணத்தில் பல கிராமங்களுக்கு நாம் சென்று வந்துள்ளோம்.அங்கு செல்கின்ற போது இம்மக்கள் சொல்லுகின்ற விடயங்களை பாரக்கின்ற போது கவலையளிக்கின்றது.சிறிய சிறிய பிரச்சினைகளைக் கூட இம்மக்களுக்கு பூர்த்தி செய்து கொடுக்க கட்சிகள் முன்னிற்கவில்லை.மாறாக தேர்தல் காலங்களில்; மக்களிடம் வந்து வாக்குகளை எடுத்து செல்கின்றனர் என்ற குற்றச்hட்டினையே மக்கள் கூறுகின்றனர்.இந்த நிலையினை மாற்றியமைக்க நாம் ஆசைப்படுகின்றோம்.அதற்காக வேண்டி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உங்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுத்தர ஆசை கொண்டுள்ளது.அதன் மூலம் நீங்கள் உங்களது பிரச்சினைகளை,இளைஞர்களின் தொழில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட இன்னோரன்னவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எமது கட்சியினை பொருத்த வரை நாம் எல்லா சந்தரப்பங்களிலும் எமது சமூகத்தின் நலனை மட்டும் மையப்படுத்தி செயற்பட்டுவந்துள்ளோம்.குறிப்பாக பொதுபலசேனா பிர்ச்சினைகளின் போது எமது அகில இலங்கை மக்கள் காஙகிரஸ் கட்சி துணிந்து நின்று அதற்கு எதிராக செயற்பட்டது.இந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதும் எமது கட்சியே என்பதை இங்கு கூறவிரும்புகின்றேன். என்றும் அமைச்சரும்,தேசிய தலைவருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சமுர்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் அமீர் அலி,வடமாகாண சபை உறுப்பினர்களான றிப்கான்,கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,கட்சியிக் பிரதி தலைவருமான ஷிப்லி பாருக்,செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்,அஷ்ரப் காங்கிரஸ் தலைவர் சுபைர்தீன் ஹாஜியார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

rishad1.jpg2_.jpg3_.jpg4_ rishad1.jpg2_

Related Post