Breaking
Tue. Jan 7th, 2025

ஆசிரிய பீடம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அமைச்சு பதவி ஏற்ற பின்னர் தனது முதலாவது அம்பாறை மாவட்ட விஜயத்தினை மேற்கொள்கிறார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீதின் அழைப்பின் பேரில் வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல ஊர்களுக்கும் விஜயம் செய்யவுள்ள அமைச்சர் றிஷாத்; சனி மாலை கல்முனை குடி பிரதேசத்தில் இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலிலும் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு சாய்ந்தமருது பிரதேசத்திலும் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார் .

ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய பொது வேட்பாளறும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்ரியை ஆதரிக்க மிக துணிச்சலாக அமைச்சர் றிஷாதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவெடுத்த பின்னர் அக்கட்சி நாடு தழுவிய ரீதியில் பெறும் எழுச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதிலும் குறிப்பாக கிழக்கிலங்கையில் பெரும் வரவேற்பையும் நம்பிக்கையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரின் அம்பாறை மாவட்ட விஜயத்தின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சுபைர் மற்றும் சிப்லி பாருக் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்படத் தக்கது.

Related Post