Breaking
Mon. Jan 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, இறக்காமம், மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் கடந்த சனிக்கிழமை (13) அன்று  இடம்பெற்றன. இந்தக் கூட்டங்களில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை கலந்துகொண்டார்.

சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முன்னாள் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாட் ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றிருந்தனர்.

மேலும், இறக்காமம் மூன்றாம், நான்காம் வட்டாரங்களில், நௌபர் மௌலவி தலைமையில் மகளிருக்கான கூட்டங்கள் இறக்காமத்தில் இடம்பெற்றன.

அம்பாறை மாவட்டத்தில் பெண் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், தேர்தல் சம்பந்தமான தெளிவூட்டலை வழங்குவதை  நோக்காகக் கொண்டே இந்தக் கூட்டங்கள் இடம்பெற்றன.

இதேவேளை, மாவடிப்பள்ளியில் தேசிய மகளிர் அணித் தலைவிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

Related Post