Breaking
Thu. Nov 14th, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப் பாவித்து உரம் உற்பத்தியாக்கும் தொழில் சாலை அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளது.

குறிப்பாக கரை யோரப் பகுதிகளில் இன்று வரை தீர்த்து வைக்க முடியாத ஒரு பெரும் பிரச்சினையாக விருந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருள்கள் அகற்றுதல் , இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சீனாவின் தனியார் முதலீட்டாளர் Zhengzhou Whirlston Trade Co .,Ltd உதவியுடன் இக் கழிவுப் பொருட்களைப் பாவித்து உரம் உற்பத்தி செய்யும் தொழில்சாலை ஒன்றை அமைக்கவுள்ளது . இத் தொழில்சாலை கல்முனைத் தொகுதியில் சொறிக் கல்முனைப் பிரதேசத்தில் அமையவுள்ளது.

தினசரி இக் கழிவுகளை சேகரிக்கும் முறையினை இக் கொம்பனி நடை முறைக்கு கொண்டு வரும் .இதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் 350 பேருக்கு வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பினைப் பெறுவர். இதன் மூலம் நமது நகரம் தூய்மை அடையும் .எமது கட்சி முதலில் நகரை சுத்தப் படுத்துவதில் இருந்து ஆரம்பித்து மேலும் எமது கட்சியால் முன் வைக்கப் பட்ட பாரிய தொழில் சாலைகளையும் வெகு விரைவில் ஆரம்பிக்கவுள்ளது என கட்சியின் ஸ்தாபகர் மொஹிடீன் பாவா குறிப்பிட்டார்

SAMSUNG CSC

????????????????
????????????????

By

Related Post