எம்.சி.அன்சார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இன்று முஸ்லிம் அரசியலில் முன்னோக்கி காலடி எடுத்து வைத்திக்கின்றது. அதிலும் முஸ்லிம்கள் செரிந்து வாழும் அம்பாறை மாவட்டத்தில் மாற்று அரசியல் தேவை.
அதற்காகத்தான் முதற்தடவையாக அம்பாறை மாவட்டத்தில் தகுதியான பலம்வாய்ந்த அணியின் மூலம் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் எமது கட்சி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்றும். என திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்ட செயலகத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்புமனுவினை நேற்று(13) தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத்தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்துத்தெரிவிக்கையில்- அம்பாறை மாவட்டம் பல்லின மக்களை கொண்ட மாவட்டமாகும். இம்மாவட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளை முகங்கொடுத்து வருகின்றனர். அந்த பிரச்சினைகளை சமூக ஒற்றுமையுடன் அதற்கான சுமுகமான தீர்வுகளை எடுத்து செல்லவேண்டும். என்பதே எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனும், எமது கட்சி வேட்பாளர்களும் ஆவலாகயுள்ளனர்.
இதன் அடிப்படையில்தான் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களிலும் பல்வேறுபட்ட புலமைகளைப் பெற்ற தகுதியான வேட்பாளர்களை களமிறங்கியுள்ளனர். பிரதான கட்சிகளுக்கு பெரும் சவாலாக எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி திகழும். மக்களின் அமோக ஆதரவு மூலம் நாம் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று சாதனை படைப்போம். என்றார்.