அஸ்ரப் ஏ சமத்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள மூவினங்களையும் சார்ந்த மக்களுக்கு வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடுமுழுவதும் முன்னெடுக்கப்படும் ‘திரிசவிய’ 50 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் வீடமைப்புக் கடன்களும் வீட்டுரிமைப்பபத்திரங்கள் அமைச்சர் சஜித்தினால் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு அம்பாறையில் உள்ள தயா அப்ரல் கூட்ட மண்டபத்தில் கிழக்கு மாகாணசபையின் உறுப்பிணர் தயா கமகே தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் வீடுகளற்ற 1900 குடும்பங்களுக்கு வீடமைப்புக்; கடன்கள் வழங்கி இந் திட்டம் ஆரம்பித்து வைக்க்ப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதியமைச்சர் அமீர் அலி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் அனோமா கமகே மாகாண அமைச்சர் மன்சுர் மற்றும் மக்கள் பிரநிதிகளும் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் சஜித் – கடந்த காலங்களில் ஊழல் நிறைந்திருந்தது. ஒரு குடும்பமே இந்த நாட்டை ஆண்டு நாட்டை சீரழித்தது. அந்த ஆட்சி தற்பொழுது முற்றுப் பெற்றுவிட்டது. ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்களின் தலைமையின் கீழ் நல்லாட்சி நிலவிவருகின்றது. சமுர்த்தி திவிநமுன திட்டத்தில் இருந்த சகல நிதிகளையும் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது இந் திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் தேர்தல் கூட்டங்களுக்கும் அங்கு நடப்பட்ட கொடிக்கம்பங்களுக்கும் மேடைகள் அமைப்பதற்கும் இந் நிதி செலவழிக்கப்பட்டுள்ளன.
நான் இந்த அமைச்சினை பாரமெடுத்து எவ்வித அமைச்சர் சம்பளமோ, அலுவலக வீடோ, வாகணமோ எடுக்காமல் அமைச்சில் ஓர் அமைச்சருக்கு மாதாந்தம் செலவழிக்கப்படுகின்ற 3 இலட்சத்து 50 ஆயிரம் ருபா பணத்தினை மீதப்படுத்தப்படுத்தி அந்நிதியை மாதா மாதம் இந்த ஏழைகளின் திரிசவிய வீடுகள் நிர்மாணிக்கவென செலவு செய்கின்றேன். என அமைச்சர் சஜித் அங்கு தெரிவித்தார்.