Breaking
Thu. Jan 9th, 2025

எம்.நேசமணி

எனது பிறந்த நாளுக்கு என் காதலி அழ­கான ரோசாப்­பூவை பரி­சாகக் கொடுத்தாள். ஆனால், அவ­ளது பிறந்த நாளுக்கோ என்னால் எந்­த­வி­த­மான பரி­சையும் கொடுக்க முடி­யாமல் போனது. அதனால் சித்­திரை புத்­தாண்­டிற்­கா­வது நல்­ல­தொரு பரிசைக் கொடுக்க எண்­ணி­யி­ருந்தேன். அந்த சந்­தர்ப்­பத்­திலும் என்­னிடம் பணம் இருக்­க­வில்லை. அம்மாவிடம் பல­முறை பணம் கேட்டும் கொடுக்­க­வில்லை. அதனால் ஏற்­பட்ட கோபத் தால் தான் அம்மாவை தாக்­கினேன். அத்­துடன் இறந்து போன அம்மாவின் சட­லத்தை நிர்­வா­ணப்­ப­டுத்தி ஆற் றில் வீசு­வ­தற்­காக சுமந்து சென்­ற­போது பல­முறை தடுக்கி வீழ்ந்தேன். கஹ­வத்தை பகு­தியில் இடம்­பெற்ற மர்மக் கொலைப்­பட்­டி­யலில் இந்தக் கொலையும் இணைக்­கப்­படும். என்னை யாரும் சந்­தே­கப்­ப­ட­மாட்­டார்கள் என்­ப­தற்­கா­கவே இப்­ப­டி­யொரு யுக்­தியை நான் கையாண்டேன் என கஹ­வத்தை கொட்ட­க­தெ­னி­யவில் படு­கொலை செய்­யப்­பட்ட சந்­தி­ராணி சுவர்­ண­ல­தாவின் இரண்­டா­வது மக­னான சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­துள்ளான்.
கஹ­வத்தை கொட்­ட­க­தெ­னி­யவைச் சேர்ந்த 39 வய­து­டைய மூன்று பிள்­ளை­களின் தாயான சந்­தி­ராணி சுவர்­ண­லதா மர்­ம­மான முறையில் கொலை செய்­யப்­பட்டு நிர்­வாண கோலத்தில் ஆற்றில் வீசப்­பட்­டி­ருந்தார்.
இந்தக் கொலைச் சம்­ப­வ­மா­னது கஹ­வத்தை பகு­தி­யெங்கும் மீண்டும் அச்­சத்­தையும் பதற்­றத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் பத்­து­மாதம் சுமந்து பாடுகள் பல பட்டு பெற்­றெ­டுத்த தாயை இவ்­வா­றாக கொடூ­ர­மான முறையில் கொன்று, அதுவும் நிர்­வா­ணப்­ப­டுத்தி ஆற்றில் வீசி­யி­ருப்­பது பெற்ற பிள்­ளை­யாக இருந்திருக்கும் என்­பதை எவரும் எதிர்­பார்த்­தி­ருக்க மாட்­டார்கள்.
இவ்­வா­றான பதற்­ற­மான சூழ்­நி­லைக்கு மத்­தியில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் விசேட பணிப்­பு­ரைக்கு அமை­வாக குற்­றப்­பு­ல­னாய்­வி­னரும் குற்­றத்­த­டுப்பு பிரி­வி­னரும் கஹ­வத்தை பொலி­ஸா­ருடன் இணைந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வந்­தனர். அத­ன­டிப்­ப­டையில் கடந்த ஒன்­பதாம் திகதி வியா­ழக்­கி­ழ­மை­யன்று கொலை­யுண்ட தாயின் இரண்­டா­வது மக­னான 18 வய­து­டைய குஷான் மகேஸ் என்­பவர் கைது செய்­யப்­பட்டார்.
சந்­தேக நப­ரிடம் பொலிஸார் மேற்­கொண்ட தீவிர விசா­ர­ணை­களின் பிர­காரம் சந்­தி­ராணி படு­கொலை தொடர்­பான மர்ம முடிச்­சுக்கள் அவிழ்க்கப் பட்­ட­துடன் பல்­வேறு அதிர்ச்சித் தக­வல்­களும் வெளி­யா­கின.
தாயின் படு­கொ­லைக்கு தானே காரணம் என ஒப்­புக்­கொண்ட சந்­தேக நப­ரான இரண்­டா­வது மகன் தாயை கொலை செய்­த­விதம் அதன் பின்னர் மேற்­கொண்ட செயற்­பா­டுகன் என சக­ல­தையும் விலா­வா­ரி­யாக தனது வாக்­கு­மூ­லத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.
மேற்­படி வாக்­கு­மூ­லத்தில் சந்­தேக நபர் கூறி­ய­தா­வது….
“நான் நிவித்­தி­கல இளைஞர் படை­ய­ணியில் பயிற்சி பெற்று வரு­கின்றேன். அங்கே பயிற்சி பெற்­று­வரும் யுவ­தி­யொ­ரு­வரை நான் காத­லித்து வரு­கின்றேன்.

வாரந்­தோரும் வீட்­டுக்கு வரு­வது வழமை. மீண்டும் திங்­கட்­கி­ழ­மையே படை­ய­ணிக்குச் செல்வேன்.கடந்த மூன்றாம் திகதி போயா தினம் என்­ற­ப­டியால் வியா­ழக்­கி­ழ­மையே வீட்­டிற்கு வந்தேன். நான்காம் திகதி காலை நானும் தம்­பியும் அம்­மா­வுடன் இணைந்து வீட்டை சுத்தம் செய்தோம். அந்த சந்­தர்ப்­பத்தில் எள­னது காத­லிக்கு குறுந்­த­கவல் அனுப்­பி­னேன்ன. “என் ஆசை செல்­லமே, தங்­கமே நீ இன்றி என்னால் இருக்க முடி­யாது. நாள்­தோறும் எனக்கு உன் அழகு முகம் தெரி­கி­றது” இப்­ப­டியே குறுந்­த­கவல் அனுப்­பினேன்.
எனது அண்ணன் ஒரு பிளம்பர். அவர் கொழும்பு பகு­தியில் தொழில் புரிந்து வரு­கிறார். ஆகையால் அவ­ரிடம் பணம் கேட்க முடி­யாது. எனவே தாயிடம் பணம் கேட்டேன். அவரோ பணம் கொடுக்­க­வில்லை. “படிப்­ப­தற்கு செலவு செய்­யவும் காத­லிக்கு பரிசு வாங்கிக் கொடுக்­கவும் என்­னிடம் பணம் இல்லை” என்றார்.
நான் அந்த யுவ­தியை காத­லித்து வரு­வதை அம்மா அறிந்து வைத்­துள்ளார். ஆகை­யி­னா­லேயே அப்­படிக் கூறினார். அம்மா பணம் கொடுக்­கா­மை­யினால் அவ­ரிடம் நான் சண்­டை­யிட்டேன். அந்த சமயம் அம்மா இரவு சாப்­பாடு சமைப்­ப­தற்­காக மூன்று முட்­டை­க­ளையும் சோயா மீட் பெக்கற் ஒன்­றி­னையும் வாங்கி வந்­தி­ருந்தார்.
அந்த சமயம் வீட்டில் அப்பா இருக்­க­வில்லை. அவர் வெளியில் சென்­றி­ருந்தார். தம்­பியும் பாட்டி வீட்­டிற்கு சென்­றி­ருந்தான். எனவே நானும் அம்­மாவும் மாத்­தி­ரமே வீட்டில் இருந்தோம். அம்மா எனக்கு பணம் கொடுக்­கா­ததால் நான் இரவு சாப்­பி­ட­வில்லை. எனது அறைக்குள் சென்று மீண்டும் காத­லிக்கு குறுந்­த­கவல் அனுப்­பினேன்.
பொலிஸார் என்­னிடம் முதல்­மு­றை­யாக விசா­ரணை செய்­த­போது, சம்­பவ தினத்­தன்று இரவு சாப்­பிட்­ட­தா­கவும் காத­லிக்கு குறுந்­த­கவல் ஏதும் அனுப்­ப­வில்லை எனவும் பொய் கூறினேன். அம்­மாவின் கொலைச் சம்­ப­வத்தில் அகப்­பட்டு விடுவேன் என்ற அச்­சத்­தி­லேயே ஆரம்­பத்தில் அப்­படிப் பொய் கூறினேன்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி எனது பிறந்­தநாள் அன்று எனது காதலி அழ­கான ரோசாப்­பூ­வினை பரி­சாகக் கொடுத்தாள். ஆனால் எனக்கோ அவ­ளது பிறந்த நாளுக்கு பரி­சொன்றை கொடுக்­க­மு­டி­யாமல் போனது. சரி, பர­வா­யில்லை. புது­வ­ரு­டத்­திற்­கா­வது நல்­ல­தொரு பரிசை கொடுப்போம் என்று எண்­ணி­யி­ருந்தேன். அதற்­கா­கவே கடந்த மூன்றாம் திகதி அம்­மா­விடம் பணம் கேட்டேன்.
அம்மா பணம் கொடுக்­காமல் என்னை திட்­டினார். அம்­மா­விடம் மீண்டும் பணம் கேட்டேன். அப்­போது அம்மா பணம் கொடுக்­க­வில்லை. பணம் கொடுக்­கா­விட்டால் கழுத்தை வெட்­டிக்­கொண்டு இறந்து விடுவேன் என கூறினேன். அதற்கு அம்மா பெண்­ணொ­ருத்­திக்­காக தற்­கொலை செய்ய நீ என்ன முட்­டாளா என தீட்­டினார். அத்­தோடு உன்னை பெற்­ற­தற்கு தோட்­டத்தில் சில வாழைக்­கன்­று­க­ளை­யா­வது நாட்­டி­யி­ருக்­கலாம் என்றார்.
அம்மா பணம் கொடுக்­காமல் மீண்டும் திட்­டி­யதால் எனக்கு கோபம் வந்­தது. எனவே சம­ய­ல­றைகுச் சென்று அங்கு பெட்­டிக்குள் இருந்த கத்­தியை எடுத்து வந்து அம்­மாவை தாக்­கினேன். அம்­மா­வுக்கு காயம் ஏற்­பட்­டது. இரத்தம் பீரிட்டு பாய்ந்­தது. எனவே அந்த சமயம் சற்று பதற்­ற­மாக இருந்­தது. அத்­தோடு அம்மா அப்­ப­டியே துடி­து­டித்தார். எனக்கு என்ன செய்­வது என்று புரி­ய­வில்லை.
உடனே அறைக்குள் சென்று கைக்­குட்­டை­யொன்றை எடுத்துக் கொண்டு வந்தேன். அம்­மாவின் கைப்­ப­கு­தியில் ஏற்­பட்ட காயத்தை சுற்றி கட்­டினேன். அதன் பின்னர் அம்­மாவை தூக்கி வந்து கீழே இருந்த மெத்­தையில் இருக்கச் செய்தேன். சற்று நேரத்தில் அம்மா இறந்து கிடந்­ததை உணர்ந்தேன்.
பதற்­ற­ம­டைந்த நான் இறந்­து­கி­டந்த தாயின் சட­லத்தின் மீது சர­மா­ரி­யாக கத்­தியால் குத்­தினேன். அதன் பின்னர் தாயின் ஆடை­களை களைந்தேன். கொட­கெ­தெ­னிய பகு­தியில் பல பெண்கள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டனர். அந்தப் பட்­டி­யலில் தாயின் மர­ணமும் சேர்க்­கப்­பட்­டு­விடும் என்று எண்­ணினேன். என்னை யாரும் சந்­தே­கப்­படக் கூடாது என்­ப­தற்­கா­கவே தாயின் ஆடை­களை களைந்து நிர்­வா­ணப்­ப­டுத்தி சட­லத்தை ஆற்றில் வீசினேன்.
ஆற்றில் வீசு­வ­தற்­காக அம்­மாவின் சட­லத்தை தூக்­கிக்­கொண்டு சென்ற போது மூன்று தட­வைகள் சட­லத்­துடன் தடுக்கி வீழ்ந்தேன். தலைப்­ப­கு­தி­யி­லி­ருந்து அதி­க­மான இரத்தம் வெளி­யே­றி­யதால் பொலித்தீன் பையொன்றை எடுத்து தலையை மூடினேன். எல்லா இடத்­திலும் இரத்தம் கொட்டும் என்­ப­தற்­கா­கவே அப்­படி செய்தேன்.
அம்­மாவின் சட­லத்தை ஆற்றில் வீசி­விட்டு உள்­ளா­டை­க­ளையும் மறைத்து வைத்­து­விட்டு வீட்­டிற்கு வந்தேன். வீடு வந்­ததும் எனது காத­லிக்கு குட்நைட் கூறி குறுஞ்­செய்­தியை அனுப்­பி­விட்டு எதுவும் தெரி­யா­த­தைபோல் உறங்கச் சென்றேன்.
அதி­காலை அப்பா வீடு­வந்தார். வீட்டில் சிந்­தி­யி­ருந்த இரத்தக் கறையை பார்த்து பதற்­ற­ம­டைந்தார். அம்­மா­வுக்கு என்ன நடந்­தது என்று எனக்குத் தெரி­யாது. நான் நன்­றாக தூங்­கி­விட்டேன் என்று அப்­பா­விடம் கூறினேன். அதன் பின்­னரே அம்மா காணாமல் போனதாக அப்பா பொலிஸில் முறைப்பாடு செய்தார்” என சந்தேக நபர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றத் தாயையே பணத்துக்காக கொலை செய்யும் அளவுக்கு இன்று சமூகம் மோசமடைந்துள்ளது எண்ணும்போது, வேதனையாக இருக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நல்ல வழிகாட்டல்களையும் போதனைகளையும் வழங்க வேண்டும். அத்தோடு எப்பொழுதும் பிள்ளைகளின் செயற்பாடுகளில் அவதானமாக இருக்க வேண்டும். அவர்களது நடத்தை மற்றும் அவர்கள் பழகுவோர் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விடயங்களை கட்டுப்படுத்துவது கடினம். எனவே பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயமானதாகும்.

Related Post