Breaking
Fri. Nov 22nd, 2024

– ஆர்.கிறிஷ்­ணகாந் –

பட்­ட­தா­ரி­க­ளுக்­காக அர­சாங்க நிறு­வ­னங்­களில் 17000 தொழில் வெற்­றி­டங்கள் காணப்­ப­டு­கின்­ற­தென்றும் இவ்­வெற்­றி­டங்­க­ளுக்கு பொருத்­த­மான தகு­தி­யு­டைய பட்­ட­தா­ரி­களை தேர்வு செய்­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இக் குழு தொடர்­பான அறிக்­கை­யொன்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள்  இரா­ஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் மேற்­கொள்­ளப்­படும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் குறித்து விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்று விரைவில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வேலை­யில்லா பட்­ட­தா­ரி­களின் பிர­ச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் பொருட்டு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தலைமையில் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post