அரசாங்கத்தின் இரகசிய கோப்புகளை வெளியிடவிருப்பதாக ஜாதிக்க ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகுகின்றவர்களின் இரகசிய கோப்புகளை கொண்டிருப்பதாகவும், எனினும் அதனை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைக் கூறியுள்ளார். (sfm)