அரசாங்கத்தின் இலத்திரனியல் அடையாள அட்டை மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தாது என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த இலத்திரனியல் அடையாள அட்டையின் ஊடாக மக்களின் அந்தரங்க தகவல்களை பாதுகாக்கும் உரிமை முடக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து அரசாங்கம் செய்யும் பிரச்சாரம் ஆச்சரியமளிக்கின்றது.
எனினும் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் அனுமதியளிப்பதில்லை. தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமையை முடக்குவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
புதிய முறைமையின் ஊடாக நபர் ஒருவரின் பிறப்பு, இனம் உள்ளிட்ட பல்வேறு தனிப்பட்ட தகல்கள் வெளியிடப்படுவதாகவும் அரசாங்கத்தின் பதிய இலத்திரனியல் அடையாள அட்டைக்கு தகவல் திரட்டும் நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.