ஜாதிஹ ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்த பின்னர் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார். நேற்று ஜனாதிபதியுடன் விசெட சந்திப்பொன்றை மேற்கொண்ட பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நாங்கள் ஆட்சியில் இணைந்திருக்கவேண்டுமென்றே விரும்புகிறது. அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி அதன் தவறுகளை சரிசெய்வதே எமது நோக்கம். நாங்கள் அதனுடன் மோதலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்க்கு எங்கள் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலம் உள்ளது,அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம், அதேவேளை ஏனைய கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது யோசனைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால்,;ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.