தேசிய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரமவுடன் இதுதொடர்பாக இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களது தீர்மானம் குறித்து அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் நல்லாட்சி அரசாங்கத்தில் இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துகொள்வதில் எந்த எதிர்ப்பும் இல்லையென பிரதமர் தெரிவித் துள்ளார்.
இந்நிலையில் வரவு செலவு திட்ட பிரேர ணையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவிருக்கும் இந்த நான்கு பேரில் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது.
இந்த அமைச்சுப்பதவி வழங்கப்படுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் தேசிய அரசாங்கம் அமைப்பதில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவி கோட்டாவின் கீழாகும்.
அத்துடன் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ள ஏனைய மூன்று பேரில் ஒருவருக்கு பிரதி அமைச்சுப்பதவியும் மற்றையவருக்கு மாவட்ட இணைப்புக்குழுவின் இணைத்தலைவர் பதவியும் வழங்கவுள்ள தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நான்கு பேரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு முன்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தி க் ஒகவுள்ளனர். அரசாங்கத்தில் இணையவு ள்ள இந்த நான்கு பேரில் ஒருவர் ‘மஹிந்த வுடன் எழுந்திடுவோம் ‘அமைப்பின் பிரபல உறுப்பினராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.