Breaking
Mon. Dec 23rd, 2024
சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளயிட்ட சிங்கள மொழி குர்ஆன் வெளியீடு நேற்று (8) கொழும்பில் நடைபெற்றது இதன்போது  உரையாற்றிய  செயலாளா் அப்துல ராசிக் –
இந்த இயக்கத்துக்கு  எதிராக நல்லாட்சி அரசாங்கம்  செயல்பட்டால் இந்த ஆட்சியை கூட மாற்றம் அளவுக்கு எங்களுக்கு சக்தியுள்ளது. நாங்கள் ஒருபோதும் அரசியலுக்குச் செல்லும் இயக்கம் அல்ல, இந்த க் குர் ஆணை இணையத்தளத்தில் டபிள்யு.டபிள்யு. ”சத்தியோதய கொம்” என்ற ”சிங்கள குர்ஆண். கொம்” என்ற வெப்தளங்களில் சிங்கள மொழி உபயோகத்தினா் அறிந்து கொள்ளமுடியும் அடுத்த படியாக சகிபுல் புகாரி ஹதீஸ் கிரந்தத்தையும் நாங்கள் சிங்கள மொழியில் செய்து வருகின்றோம். அதனையும் கட்டம் கட்டமாக வெளியிடுவோம். இந்தாநாட்டில் வாழுகின்ற முஸ்லீம் அல்லாத 80 வீத சிங்கள மக்களது கைகளில இந்த குர்ஆன் செல்ல வேண்டும். அவா்கள் குர்ஆன் முலம் தெளிவு பெறல் வேண்டும். அதுவே எமது இலக்கு குர் ஆணை அவா்கள் அறிய ஆவலாக உள்ளாா்கள். அதனை  சிங்கள மொழி முலம் வழங்கி அவா்கள் எம்மைப்பற்றிய எமது மத சந்தேகங்களை தீா்த்துக்கொள்வதே இந் மொழிபெயா்ப்பின் ஆரம்பமாகும் என ராசீக் உரையாற்றினா்.
இங்கு ரஸ்மின் உரையாற்றுகையில் –
இலங்கையில் கடந்த 3 வருடத்தில் இரத்தானம் வழங்கும் நிலையில் முதலம் இடத்தை  வகிக்கின்றது. அதேபோன்று தமிழ் நாட்டில் முதல் இடத்தில வகிக்கின்றது. நாங்கள் இரத்தம் குடிப்பவா்கள் இரத்தம் வழங்கிகள். இந்த நாட்டில் காதியான்கள், சியாக்கள் ஊடுருவியுள்ளன. அண்மையில் ஓட்டமாவடியில் நிலை கொண்டுள்ளனா்.  அங்கு அவா்கள் நடு வீதியில் பிரச்சாரத்தில் ஆயிசா ரலி அவா்கள் ஒரு விபச்சாரி எனக் கூறியிருக்கின்றனா். அதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா லெட்டர் பெட்டில் வெறும் கண்ட அறிக்கை ஒன்றையே வெளியீட்டது. தரிக்காக்களுக்கு எதிராகவே தப்லீக் இயக்கம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது அவா்கள் அவா்களோடு சாா்ந்து போகின்றனா்.
குர் முதற்பிரதிக பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபுரஹ்மான், முஸ்லீம் காங்கிரஸ் மேல்மாகாணசபை உறுப்பிணா் நிசம்டின், மற்றும் ரவுப் ஹாசீர், மொளலவி  அப்துல் மஜீத் சட்டத்தரணிகள் பொலிஸ் ்அதிகாரிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

By

Related Post