அரசாங்கம் இலவசமாக வழங்கும் சகலவற்றையும் பெற்றுக்கொண்டு ஜனவரி 8 ஆம் திகதி தனக்கு வாக்களிக்குமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை வரவழைக்க முடிந்ததாக ஜனாதிபதி பெருமை பேசி வருகிறார். ஆனால் அந்த மக்கள் கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம்.
எதிர்வரும் நாட்களில் செல்போன்கள், சேலைகள் மற்றும் சைக்கிள்களை கொண்ட கொள்கலன்கள் இலங்கைக்கு வரவிருக்கின்றன.
இதனால், இலவசமாக அரசாங்கம் கொடுக்கும் பொருட்களை வாங்கி கொண்டு எதிரணியின் பொது வேட்பாளரான எனக்கு வாக்களியுங்கள் என மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.