Breaking
Fri. Dec 27th, 2024

அப்துல்லாஹ்

அரசாங்க வைத்தியர்களுக்கான மாதாந்த விஷேட அலவன்ஸ் ஏப்ரல் மாதம் தொடக்கம் ரூபா 35 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்தக் கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக இருந்தது.
இது தொடர்பான சுற்றறிக்கை அந்த அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சின் செயலாளர் ஆர் பி திஸநாயக்காவினால் ஒப்பமிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் அதிகரித்த கொடுப்பனவு பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய சுற்றறிக்கையின்படி ஏப்ரல் மாதம் தொடக்கம் அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாவுடன் மொத்தம் 35 ஆயிரத்தை அரசாங்க வைத்தியர்கள் விஷேட மாதாந்த அலவன்ஸாகப் பெறுவார்கள்.

Related Post