Breaking
Mon. Dec 23rd, 2024

பொலிஸ் மா அதி­ப­ராக நான் கடந்த 2011 ஆம் ஆண்டு கட­மை­களை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து ஓய்வுபெறும் வரை எனக்கு பல அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. பல அர­சி­யல்­வா­திகள் கட­மையின் போது தலை­யீ­டு­களை செய்­தனர் என்று நேற்று ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­ககோன் தெரி­வித்தார்.

அர­சியல் தலை­யீ­டு­களை நான் தைரி­யத்­துடன் எதிர்­கொண்டேன். எனினும் சட்­டத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட மறுத்தேன். இதனால் பல சவால்­களை எதிர்­கொள்ள நேர்ந்­தது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­ன­ரான காலப்­ப­கு­தி­யா­னது பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்ற உகந்த சூழலைக் கொண்­டி­ருக்­க­வில்லை. அதனால் அந்தக் கதி­ரையில் நான் பாரிய சவால்­களை சந்­தித்தே அமர்ந்­தி­ருந்தேன். தற்­போது அந் நிலைமை மாறி­விட்­டது. அதனை அச்­ச­மின்றி தெரி­விக்­கின்றேன் என்றும் என்.கே.இலங்­ககோன் சுட்­டி­காட்­டினார்.

ஓய்வு பெறு­வ­தை­ய­டுத்து பொலிஸ் தலை­மை­ய­கத்தில் நேற்று முற்­பகல் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த போதே ஓய்­வு­பெறும் பொலிஸ்மா அதிபர் இந்த விட­யங்­களை தெரி­வித்தார். செய்­தி­யாளர் சந்­திப்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்

“36 வருட சேவையின் பின்னர் நான் இன்­றுடன் ஓய்வு பெறு­கிறேன். நான் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய காலப்­ப­கு­தி­யிலும் அதற்கு முன்­னரும் எனது கட­மை­களை நிறை­வேற்ற ஊட­கங்கள் எனக்கு தந்த ஒத்­து­ழைப்பு மறக்­க­டிக்­கப்­பட முடி­யா­தது. அதற்கு நன்றி செலுத்­து­வது எனது பொறுப்பு.

நான் 4வரு­டங்­களும் 10 மாதங்­களும் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றி­யுள்ளேன். அண்­மைய பொலிஸ் வர­லாற்றில் இவ்­வ­ளவு நீண்­ட­காலம் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றி­யவர் நான்தான். . இந்­த­கா­லப்­ப­கு­தியில் பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் நாட்டு மக்­க­ளுக்கு எனது சேவையை சரி­வர செய்­துள்ளேன் என்று நம்­பு­கிறேன். பொலிஸார் வழி­த­வறும் பொழுது அதனை சுட்­டிக்­காட்டி பொலிஸார் தொடர்பில் நியா­ய­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்து சரி­யான பாதையில் பய­ணிக்க ஊட­கங்கள் வழங்­கிய ஒத்­து­ழைப்பு நன்­றிக்­கு­ரி­ய­வை­யாகும்.

மக்­க­ளுக்கு பொலிஸார் மீது நம்­பிக்கை முக்­கியம். அது இல்­லை­யெனில் பொலிஸ் சேவையின் நிலைமை தொடர்பில் கூற­வேண்­டி­ய­தில்லை. பொலிஸ் மா அதிபர் பத­வியில் இருப்­பது என்­பது ஒன்றும் இல­கு­வான விட­ய­மல்ல. பல சவால்­களை எதிர்­கொள்ள நேரிடும். நான் பொலிஸ் மா அதி­ப­ராக தெரி­வாகி ஒரு மாதத்­திற்­குள்­ளேயே சவால்கள் ஆரம்­பித்­தன. கிரிஸ் பூதம் பிரச்­சி­னையே அது­வாகும். அது முதல் எம்­பி­லிப்­பிட்­டிய வரையில் பல சவால்­களை எதிர்­கொண்டு விட்டேன்.

எனது காலப்­ப­கு­தியில் அர­சியல் ரீதி­யிலும் பல முக்­கிய நிகழ்­வுகள் பதி­வா­கின. 9 மாகாண சபை தேர்­தல்கள், ஜனா­தி­பதி தேர்தல், பாரா­ளு­மன்ற தேர்தல், உட்­பட 11 தேர்­தல்கள் இடம்­பெற்­றன. அதில் இறு­தி­யாக ஜனா­தி­பதி, பாரா­ளு­மன்ற தேர்­தல்கள் முக்­கி­ய­மா­னவை.

2011 ம் ஆண்டு குற்­ற­வி­சா­ர­ணைகள் தீர்வு தொடர்­பான சத­வீதம் 44 ஆக இருந்­தது. இதனை 59 வீத­மாக உயர்ந்த என்னால் முடிந்­தது. 30 வருட கால­யுத்­தத்தில் தேங்கி கிடந்த 68000 நீதி­மன்ற உத்­த­ர­வு­களை எம்மால் அமுல் செய்ய முடிந்­தது. விசே­ட­மாக பொது­மக்கள் உறவைக் கட்­டி­யெ­ழுப்பி உள்ளோம். போதைப் பொருள் சுற்­றி­வ­ளைப்­பு­களை அதி­க­ரித்­துள்ளோம்.

அத­னா­லேயே 2013 இல் 260 கிலோ ஹெரோ­யினும் அண்­மையில் 110 கிலோ ஹெரோ­யினும் சிக்­கி­யது.

பொது மக்­களின் நிறு­வனம் என்ற ரீதியில் அவர்­க­ளது எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வதே பொலி­ஸாரின் முக்­கிய பணி­யாகும். பொது மக்­களின் வரிப் பணத்தில் சம்­பளம் பெறும் நாம் அக்­க­ட­மையை சரி­வர நிறை­வேற்ற வேண்டும்.

அவ்­வாறு சேவை செய்யும் போது நான் பல குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளானேன். எனினும் காலம் அதற்கு பதில் சொல்லும்.

எனது நட­வ­டிக்­கையில் மனக் கசப்­புக்கள் ஏற்­பட்­டி­ருப்பின் மன்­னிப்பு கோரு­கிறேன். நான் பத­வி­யேற்கும் போதும் பொலிஸ் சேவையில் இணையும் போதும் இருந்த அதே சந்­தோ­ஷத்­து­ட­னேயே ஓய்வு பெறு­கிறேன் என்றார்.

கேள்வி: பதவி நீடிப்பு கோரி­யி­ருக்­க­லாமே?

பதில்: அப்­படி ஒரு எண்ணம் எனக்கு இருக்­க­வே­யில்லை. நான் பத­வி­யேற்கும் போது பத­விக்­காலம் நிறை­வ­டைந்­ததும் ஒரு நாள் கூட இக்­க­தி­ரையில் அம­ர­மாட்டேன் எனக் கூறினேன். அத­னையே இன்று நான் ஓய்­வாக அறி­விக்­கிறேன்.

கேள்வி: உங்கள் காலப்­ப­கு­தியில் நீங்கள் அர­சியல் உத்­த­ர­வுகள், தலை­யீ­டு­களை எதிர் கொண்­டீர்­களா?

பதில்: அர­சியல் – அரச சேவையை குழப்பிக் கொள்ள கூடாது. அரச சேவை­யா­ளர்கள் தமது கட­மையை சரி­வர செய்­யாத போது அது தொடர்பில் தட்டிக் கேட்க மக்கள் பிர­தி­நி­திகள் என்ற ரீதியில் அர­சியல் வாதி­க­ளுக்கு உரிமை உள்­ளது.

நாம் எமது கட­மை­களை சரி­வர செய்யும் போது அவர்கள் தலை­யீடு செய்­வ­தற்­கான சந்­தர்ப்பம் மிகக் குறைவு. தேவை­யற்ற தலை­யீ­டுகள் வரின் அதனை தைரி­யத்­துடன் எதிர்­கொண்டு நிரா­க­ரிக்க வேண்டும்.

கேள்வி: உங்­க­ளுக்கு அவ்­வாறு வந்­ததா?

பதில்: ஆம், அவற்றை நான் அவர்­க­ளுக்கு விளக்கி சட்­டத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட முடி­யாது என நிரா­க­ரித்த சந்­தர்ப்­பங்கள் பல உள்­ளன. அப்­படி இல்­லை­யாயின் எனது காலப்­ப­கு­தியில் 200 க்கும் அதி­க­மான அர­சி­யல்­வா­தி­களை கைது செய்­தி­ருக்க முடி­யாது.

கேள்வி: பொலிஸ்மா அதிபர் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய தோன்­றி­ய­துண்டா? பின்­ன­டை­வுகள் ஏற்­பட்­டதா?

பதில்: ஆம், பல சந்­தர்ப்­பங்­களில் பத­வியை இரா­ஜி­னாமா செய்ய யோசித்­த­துண்டு. பின்­ன­டை­வு­களும் ஏற்­பட்­டன. எனினும் தைரி­ய­மாக எதிர்­கொண்­டதால் தொடர்ந்தும் சேவை செய்ய முடிந்­தது.

கேள்வி: பொலி­ஸாரின் நலன், பதவி உயர்வு, இட­மாற்ற விவ­கா­ரத்தில் உங்கள் திட்­டங்கள் தோல்­வியை சந்­தித்­துள்­ள­னவே?

பதில்: அப்­படி இல்லை. அதன் பிர­தி­ப­லனை இன்னும் 2, 3 மாதங்­களில் பார்க்­கலாம். பொலிஸ் பதவி உயர்வு, இட­மாற்றம் தொடர்பில் ஸ்திர­மான திட்டம் தயா­ரா­கி­விட்­டது.

காப்­பு­றுதி, சம்­பள அதி­க­ரிப்பு விட­யங்­களும் இறு­தி­கட்­டத்தில் உள்­ளது. எனவே அது எனக்கு வெற்­றியே.

By

Related Post