அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது,
மிக இளம்வயதில் நோபல் பரிசைப் பெறுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்யார்த்தியின் பணிகள் எனக்கு தூண்டுகோலாக இருந்தன.
ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் எழுந்து நிற்க வேண்டும். நான் நோபல் பரிசை பெறும்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்தியா-பாகிஸ்தான் நட்புறவு சிறப்பாக வேண்டும். தற்போது எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலை அதிருப்தி அளிக்கிறது. இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும். கல்வி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.
எதிர்காலத்தில் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது அரசியல்வாதியாக வர வேண்டும் என விரும்புகிறேன்.