புதிய அரசியல் பாதையை உருவாக்கும் நல்ல தருணம் தற்போது பிறந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற கூட்ட மொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
அநேக தரப்பினர் பல்வேறு கோங்களுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சிக்கு வந்த போதிலும் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை.
அத்துடன் அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்டுள்ள தரப்பினர் மீண்டும் அரசியலுக்குள் பிரவே சிப்பதற்கு தற்போதைய அரசு இடமளிக்கக் கூடாது.
பொதுத் தேர்தலுக்குச் செல்ல அச்சம் கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் 19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தோற்கடிக்க வேண்டியது மக்கள் மாத்திரமல்ல, சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கடமை என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.