Breaking
Sat. Nov 16th, 2024

மாணவ சமூகத்திற்கான கல்வியினை பெற்றுக் கொடுக்கின்றபோது அதில் அரசியல் இலாபங்களை எவரும் பார்க்கக் கூடாது, கடந்த அரசாங்கத்திலும் அமைச்சராக இருந்ததன் படியால் இந்த மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளுக்கு மஹிந்தோதய ஆய்வு கூடங்களை கொண்டுவர முடிந்தது என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் இதன் மூலம் பிரதேசத்தின் கல்வி துறை போட்டித்தன்மைக் கொண்டதாக மாறும் என்றும் கூறினார்.

மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட காக்கையன்குளம் மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மஹிந்தோதய ஆய்வு கூடத்தினை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மடு வலயக் கல்வி பணிப்பாளர் எம்.ஜே.எம்.குரூஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு பேசுகையில் கூறியதாவது –

இந்த பாடசாலைக்கான பல தேவைகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மடு கல்வி வலயத்தில் மிகவும் தொலைவில் உள்ள பாடசாலை இதுவாகும். இங்கு கல்வி கற்கும் மாவணர்களுக்கு ஆசிரியர்கள் முழுமையான கற்றல் செயற்பாடுகளை வழங்க வேண்டும்.

கடந்த 20 வருடங்களாக யுத்தவடுக்களால்  பெரிதும் இந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். நான் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து மின்சாரம் உள்ளிட்ட இன்னும் அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுத்துள்ளேன். திறப்பு வழாக்களில் கலந்து கொள்ள வேணடும் என்பதற்காக நாம் இந்த கட்டிடங்களை அமைப்பதில்லை. இந்த மாவட்ட மக்களது கஷ்டங்களை நன்கு உணர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றேன்.

சிலர் இதனை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முனைகின்றனர். இப்படிப்பட்டவர்கள் மக்களுக்கு அவர்களது சேவைகளை செய்ய வேண்டும், அவ்வாறு இல்லாமல் அரசியல் இலாபங்களுக்காக இதனை செய்ய முற்படுகின்றபோது அதில் அவர்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காது.

இந்த அரசியல் அதிகாரங்கள் எனபன மக்கள் வழங்கிய வாக்குகளின் மூலம் கிடைக்கப் பெற்றவை,அதனை உதறித்தள்ளிவிட்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக செயற்படும் நிலையினை கானுகின்றேம்.இவ்வாறான செயல்களால் எமது மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்கள் என்னை நியமித்துள்ளார். ஏனெனில் என் மீதும், எனது மக்கள் பணியின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையாகும்.இந்த குழுத்தலைவர் பதவியானது மாவட்டத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து பணிகளும் மக்களை சென்றடைகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அதில் ஒரு பகுதியாகும் என்றும் அமைச்சர் றிஷாத் பதியுதீன்  இங்கு கூறினார்.

Related Post