அரசியல் எதிர்கலம் பற்றி விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வெகு விரைவில் பொருத்தமான தருணத்தில் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கம் என்ற பெயரில் மக்களை பிழையாக வழி நடத்துகின்றன.
இரண்டு கட்சிகளினதும் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலிலிருந்தே இந்த இரண்டு கட்சிகளுக்கு எதிராகவும் செயற்படத் தீர்மானித்துள்ளேன்.
தேசிய அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு தரப்புடனும் இணைந்து செயற்படத் தயார்.
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு மக்களின் தூற்றுதல்களிலிருந்து தப்பிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.