Breaking
Tue. Jan 7th, 2025

முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் அரசியல் என்றால் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு, முஸ்லிம் மக்களின் உரிமைகளை வென்று கொடுப்பது. ஆனால் இது இந்த காலகட்டத்தில் ஒரு கடினமான பணியாகும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக்களை புனரமைப்பு செய்யும் பொருட்டு அட்டாளைச்சேனை பல நோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்தில் இடம்பெற்ற கட்சி அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்!

ஒரு கட்சி ஒரு அரசாங்கம் என்றிருந்தால் இந்த விடயம் இலேசாக இருக்கலாம். இந்த கால கட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு பொற்காலமாகும் என்றார்.

எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு மருதமுனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார கிளை உறுப்பினர்களுடனான சந்திப்பு மருதமுனை 02 வட்டாரக் குழு அமைப்பாளர் முஸ்தபா கலீல் இல்லத்திலும் இடம்பெற்றது.

மருதமுனை 02 வட்டாரக் குழு அமைப்பாளர் முஸ்தபா கலீல் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், மருதமுனை மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வுகளில் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Post