Breaking
Sun. Dec 22nd, 2024
கடந்த போர்ச் சூழலின் பின்னர் வடக்கில் கைது செய்யப்பட்டு விசாரைணகைள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விசாரணைகளை துரிதபடுத்தி அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் ஆகியோரிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற வகையிலும்,இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் இந்த வேண்டுகோளை தாம் முன் வைத்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த யுத்த காலத்திலும்,அதன் பின்னரும் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டனர்.அந்த வேளையில் அப்போதைய அரசாங்கத்திடம் நாம் முன்வைத்த கோறிக்கையின் அடிப்படையில் பலர் விசாரணைகளின் பன்னிர் விடுவிக்கப்பட்டனர்.மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த இன்னும் சிலர் விசாரணைகளின் தடுத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பில் அப்பிரதேச மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.கிராமங்களுக்கு செல்கின்ற போது  கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தம்மிடம் வந்து தமது உறவுகளை விடுவித்து தருமாறு கேட்கின்றனர்.
.
இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தான் தெரிவிப்பதாக அவர்களிடம் கூறியுள்ளேன்.அதனை தற்போது ஜனாதிபதி,மற்றும் பிரதம மந்திரி ஆகியோரின் கவனத்திற்கு கொண்டும் வந்துள்ளேன்.
வடக்கில் நிலவிய அசாதாரண சூழலினால் கைது செய்யப்பட்ட பலர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அவர்கள் இன்று சமூகத்தில் மிகவும் நற்பிரஜைகளாக வாழ்ந்துவருகின்றனர்.அதே போன்று தற்போதும் தடுப்பில் இருக்கும் அரசியல் மற்றும் விசாரணைகளுக்கென தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விசாரணையினை துரிதப் படுத்தி அவர்களின் விடுதலைக்கும் தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பதன் அவசியத்தையும் தாம் வலியுறுத்தியுள்ளதாக தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள குடும்பங்களின் உறுப்பினர்களை அமைச்சரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post