– அலுவலக செய்தியாளர் –
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்துள்ள இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகள், ஜனாதிபதிக்கு மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் என கூறப்படுவோர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அவர்களை விடுதலை செய்வது தவறு எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலி அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்வதன் ஊடாக நாட்டை மீண்டும் பாதாள குழிக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக இராவணா பலய அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதி செயலாளருக்கும், இராவணா பலய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் கூறினார்.