Breaking
Mon. Dec 23rd, 2024

எம்.வை.அமீர்

நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முடிவுக்குக்கொண்டுவரும் எனது வேலைத்திட்டத்தின் கீழ் என்னால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் 2015-08-01 ம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளமன்றம் சென்ற சில பாராளமன்ற உறுப்பினர்கள் இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வில்லை என்றும் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனேயே தான் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த காலத்தில் ஒரு அரசாங்க உத்தியோகத்தராக இருந்து கொண்டு பல்கலைக்கழகத்திலும் வெளியேயும் பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளதாகவும் மக்கள் ஒரு சந்தர்ப்பம் தருவார்கள் என்றால் இதைவிட பலமடங்கு அம்பாறை மாவட்டத்திலும் ஏன் முழு நாட்டுக்கும் தன்னால் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக சிறந்த ஒரு வேட்பாளர் இல்லாததன் காரணமாக சம்மாந்துறை தனக்கான பாராளமன்ற உறுப்பினரை இழந்து வருவதாகவும் அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்றும் தனது பின்னால் நாளாந்தம் அலையலையாக மக்கள் திரண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
.
இப்போது ஏற்பட்டுள்ள சிறந்த வாய்ப்பை சம்மாந்துறை மக்கள் உட்பட அம்பாறை மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இஸ்மாயில், அம்பாறை மாவட்டம் முழுவதும் மயிலின் ஆட்டம் களைகட்டியுள்ளதாகவும் தங்களுக்கு ஒரு உறுப்பினரைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்கனவே ஏற்பட்டு விட்டதாகவும் அடுத்த உறுப்பினரை பெற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

Related Post