Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசிலிருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசும் முன்னைய அரசைப் போலவே,கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால்,

நாம் அரசிலிருந்து இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசில், ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிப்பதுடன், இதன் செயலாளரான சம்பிக்க ரணவக்க அமைச்சராகவும் பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Post