துபாயின் அமீரான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் துபாயிலுள்ள அரச அலுவலகங்களுக்கு மேற்கொண்ட திடீர் விஜயத்தின்போது, உயர் அதிகாரிகள் பலர் அலுவலங்களில் இல்லாதிருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
இதையடுத்து 9 சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பலரை பணியலிருந்து ஓய்வு பெறுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
65 வயதான ஷேக் மொஹம்மத் பின் ரஷீட், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உப ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிப்பதுடன், துபாயின் அமீராகவும் (ஆட்சியாளர்) விளங்குகிறார்.
கடந்த ஞாயிறன்று அவர் துபாயிலுள்ள அரச அலுவலகங்கள் பலவற்றுக்கு அவர் திடீர் விஜயங்களை மேற்கொண்டார். காலை 7.30 மணிக்கு இப்பயணத்தை ஆரமபித்தார்தார்.
துபாய் மாநகர சபை, துபாய் சர்வதேச விமான நிலையம், காணி திணைக்களம், பொருளாதார அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றக்கு அவர் விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின் போது பல அலுவலகங்களில், உயர் அதிகாரிகள் கடமைக்கு சமுகம் அளிக்காதை அவர் அறிந்துகொண்டார்.
அதையடுத்து 9 சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பலரை பணியிலிருந்து ஓய்வு பெறுமாறு அவர் உத்தரவிட்டார்.
மேற்படி 9 அதிகாரிகளின் சேவைக்காக திங்கட்கிழமை ஷேக் மொஹம்மத் பின் ரஷீட் அல் மக்தூம் நன்றி தெரிவித்தார்.
எனினும், பொதுமக்களுக்கு உயர்தரமான சேவை வழங்குவதற்காக இளம் தலைவர்கள் பணிகளை பொறுப்பேற்க வேண்டும் என தான் விரும்புவதாக அவர் கூறினார்.