அரச உத்தியோகத்தர்கள், அமைச் சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் உரிமையற்ற அனைத்து அரச உத்தி யோகத்தர்களும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.
நேற்றுக் காலை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஜனாதிப தித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக் கலின்போது, வேட்பாளர்க ளுக்கிடை யில் உரையாற்றியபோதே மேற் கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,
இன்று (நேற்று) முதல் ஜனாதிபதித் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் தினம் வரை நேரடியாக தேர்தல் தொழிற் படும் காலமாக இருப்பதால், இக் காலப் பகுதியில் பொதுச் சட்டத்துக்கு மேலதிக மாக தேர்தல் சட்டம் அமுலில் இருக் கும்.
தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறுகின்ற காணிகளிலும், அனு மதி பெறப்பட்டு நடத்தப்படுகின்ற தேர் தல் பிரசார அலுவலகங்கள் தவிர்ந்த வேறு எந்த இடத்திலும் வேட்பாளர் தொடர்பில் பிரசாரம் செய்யக்கூடிய அறிவித்தல் பலகைகள், தேர்தல் சின் னங்கள், கட்சி, வேட்பாளரின் பெயர், வேட்பாளரை ஊக்குவிக்கக்கூடிய கொடிகள், பதாகைகள், சித்திரங்கள், உறுவப்படங்கள் என்பவற்றைக் காட் சிப்படுத்த முடியாது. வேட்பாளரோ அல்லது முழு நாட்டுக்கு அவர் சார்பில் நியமிக்கப்படும் முகவர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பயணம் செய்யும் வாக னங்களில், வேட்பாளரின் உருவப் படமோ, பதாகைகளோ காட்சிப்படுத் துவது தடைசெய்யப்பட்டுள்ளது. வாகன மற்றும் நடை பவணி நடத்து வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் என்பவற்றுக்கு மட்டும் இதனைச் செய்ய முடியாது. வேட்பாளர் கள், முகவர்கள், ஆதரவாளர்கள், ஊட கங்கள், கண்காணிப்பு அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் இந்த விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும்.
தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல் திணைக்களம், மாவட்ட தேர் தல் தெரிவத்தாட்சித் திணைக்களம், பொலிஸ் தலைமையகம், பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைபாடு செய்ய முடியும்.
தேர்தல் பிரசாரஙகளில் ஈடுபடும் ஊடகங்கள் அனைத்து வேட்பாளர்க ளுக்கும் சம அளவிலான ஒத்துழைப்பு களை வழங்க வேண்டும். ஒரு வேட் பாளருக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து, ஏனைய வேட்பாளர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் நடவடிக் கையை ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என நான் கேட்டுக் கொள்கின்றேன்.
ஏதேனும் ஒரு ஊடகம் பக்கச்சார்பா கவும், சமனிலைத் தன்மைற்ற முறை யில் பிரசாரங்களை மேற்கொள்ளு கின்றபோது, அரசமைப்பின் ஏற்பாடு களையும், அந்த ஏற்பாடுகளுக்கமைய எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத் தின்கீழ் என்னால் வழங்கப்பட்டுள்ள ஊடக வழிகாட்டியின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும்.
அரச உத்தியோகத்தர்கள், அமைச் சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் உரிமையற்ற அனைத்து அரச உத்தி யோகத்தர்களும் அரசியல் நடவடிக் கையில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரச கட்டடங்கள், வாகனங்கள் என்பவற்றை வேட்பாளர் ஊக்குவிக்க பயன்படுத்துக்கூடாது” – என்றார்.