Breaking
Tue. Dec 24th, 2024

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் அரச காணிகளை சட்டவிரோதமான முறையில் தனியார்கள் உரிமை கோறுவதை தடைசெய்வதற்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைமைகளான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் ஆகியோரது தலைமையில் இடம் பெற்ற போதே மேற்படி தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டமாவடி பிரசே சபை பிரிவில் சட்ட விரோதமான முறையில் காடுகளை அழித்து தனி நபர்கள் காணி விற்பனையில் ஈடுபடுவதாக வன இலாகா அதிகாரியால் ஒருங்கினைப்பு குழு கூட்டத்திற்கு தெரியப்படுத்திதையடுத்தே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அரச காணிகளில் குடியிருப்போர் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் அந்த காணியை அவர்களுக்கு வழங்குவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீள் பரிசீலினை மேற்கொள்வார்கள் என்றும் தகுந்த ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் தங்களது காணி என்று போலி ஆவணங்களை தயாரித்து காணிக்கு உரிமை கோருபவர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதே வேளை ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் காணப்படும் கட்டாக்காளி நாய்களை பிடிப்பதுடன் விசர் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு கோறளைப்பற்று மேற்கு கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகமும் ஓட்டமாவடி பிரதேச சபையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மாணம் மேற்கொள்ளப்பட்டது.

இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் திருமதி நிஹரா மௌஜூத், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் உட்பட பிரதேச திணைக்களங்களின் தலைவர்களும் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

Related Post