Breaking
Mon. Dec 23rd, 2024
தனியார் துறைகளை போன்று அரச நிறுவனங்களிலும் மின்சக்தி, எரிசக்தி முகாமைத்துவ பிரிவொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய சக்தி ஆற்றலுக்கான விருது வழங்கும் விழா பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சக்தி, எரிசக்தி துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்களுக்கு அரச துறை மாத்திரமன்றி, தனியார் துறையினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், மின்சக்தி, எரிசக்திக்கான முதலீட்டை ஊக்குவிப்பதற்கான தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சக்திக்காக வெளிநாடுகளுக்கு அதிகளவிலான நிதி செல்வதாகவும், அதனை சேமிப்பது மிகவும் அவசியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக தனியார் மற்றும் அரச துறையினர் மிகவும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச நிறுவனங்களில் கடமைகள் நிறைவு பெற்றதன் பின்னர் இலத்திரனியல் உபகரணங்களை செயலிழக்க செய்யாது வீடுகளை நோக்கி செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதனால் அரச நிறுவனங்களிலுள்ள ஒரு அதிகாரிக்கு மின்சார முகாமைத்துவம் தொடர்பான பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

By

Related Post