அம்பாரை மாவட்டத்தில் சோளப்பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் “சேனாபுழுக்களின் ” பாதிப்பினால் பாதிப்படைந்துள்ள அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு இன்று அம்பாரை மாவட்ட கச்சேரியில் மாவட்ட செயலாளர் D.M.L பண்டார அவர்களின் தலைமையில் விவசாய , கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி கௌரவ. அமைச்சர் ஹரிஸன் அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பங்குபற்றிய நமது பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். எஸ் . எம். எம். இஸ்மாயில் அவர்கள் நமது மாவட்ட விவசாயிகள் அரச நெற்கொள்வனவின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக கௌரவ. அமைச்சரிடம் எடுத்துரைத்தார். சந்தையில் நெல்லூக்கான விலை வீழ்சசியடைந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள்.
தற்போது அரச நெற்கொள்வனவின் போது தலா ஒரு விவசாயிக்கு 2000 கிலோ நெற்கொள்வனவு செய்யப்படுகின்றது .இது விவசாயிகள் திருப்தியடையும் வகையில் அமையவில்லை எனவே இக்கொள்வனவு தொகையினை இருமடங்காக உயர்த்தி தருமாறு அமைச்சர் அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் மகஜர் கையளிக்கப்பட்டது.
அமைச்சர் அவர்கள் தொடர்ந்தும் உரை நிகழத்தும் போது இஸ்மாயில் எம்.பி வேண்டிக்கொண்டதற்கமைய இம்முறை நெற்கொள்வனவினை அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாக இருக்கிறது. எதிர்வரும் போகத்தில் நெற்கொள்வனவினை இரட்டிப்பாக்கி தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.