Breaking
Sun. Dec 22nd, 2024
அரச பணத்தை விரயமாக்கும் வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுற்று நிருபம் ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.
தேவையற்ற வகையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசேட சுற்றுநிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பொதுமக்கள் பிரதிநிதிகள், அமைச்சின் செயலாளர்கள், அரசாங்க உயர் அதிகாரிகள் எவ்வித பயனும் இல்லாது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அதற்காக பாரியளவில் பணம் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்க அதிகாரிகள் ஆண்டு ஒன்றுக்கு வெளிநாட்டுப் பயணங்களுக்காக 400 கோடி ரூபா செலவிடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் அநேக வெளிநாட்டுப் பயணங்களில் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ கடுகளவும் பயனில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறு தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்படுவதனை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அண்மையில் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதனை அமுல்படுத்தும் நோக்கில் விசேட சுற்று நிருபம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

By

Related Post