Breaking
Mon. Dec 23rd, 2024
தமக்கெதிராக அரச மருத்துவ சம்மேளனத்தினர் வழக்குத் தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக முன்னதாக அரச மருத்துவர் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
குறித்த பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளக பயிற்சிகளுக்கு அரச மருத்துவமனைகளில் அனுமதி வழங்கியமைக்கு எதிராகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தமது தரப்பு நியாயத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் சேனாரட்ன, நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு ஏற்பவே மாலபே தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே, தாம் நீதிமன்றத்தில் வைத்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள தயார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

By

Related Post