புளத்கொஹுபிட்டிய, அம்பலம பிரதேசத்திலுள்ள பல இடங்களிலும் வீடுகளிலும் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்புக் கோடுகள் விழுந்துள்ள நிலையில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதேவேளை, மண்சரிவு அபாயத்துக்கு இலக்காகியுள்ள ரணால, தெடிகமுவ மலையை அண்மித்த 13 குடும்பங்களையும் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், அரநாயக்க பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, அம்பலம மலையும் நேற்றுச் சரிந்துள்ளது. இந்த அம்பலம மலையானது, அரநாயக்க சாமசர மலையின் மற்றுமொரு வளைவிலேயே அமைந்துள்ளது. இந்த மண்சரிவு காரணமாக, அம்பலம மலையடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முகாமொன்றை அங்கிருந்து அகற்றியுள்ள செஞ்சிலுவைச் சங்கம், அதனை அண்மித்த பிரதேசமான திக்பிட்டியவில் அம்முகாமை அமைத்துள்ளது.
இதேவேளை, சாமசர மலையிலும் தொடர்ந்து மண்சரிவு ஏற்படக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.