அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு தீடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் படைவீரர்கள் மற்றும் அதிகாரிகளே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எல்.எம்.ஆர்.மார்க் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அரநாயக்கவின் தற்போதைய சுற்றுச் சூழல் மற்றும் சடலங்களிலிருந்து வெளியாகும் கிருமிகள் போன்றவற்றினால் இவ்வாறு நோய் வாய்ப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை அளிக்கப்படும் எனவும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்ய இன்னும் சில காலம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.