Breaking
Mon. Dec 23rd, 2024

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசியின் அசாதாரண விலையேற்றம் காரணமாக மக்களுக்கு சாதாரண விலையில் அரிசியை நாடெங்கும் சில்லறையாகவும் மொத்தமாகவும் விநியோகிக்க சதொச நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நாடு பூராகவுமுள்ள 370 சதொச நிறுவனத்தினூடாக சாதாரண விலையில் அரிசி உட்பட அத்தியாவசிப் பொருட்களை  நியாயமான விலையில சதொச நிறுவனம் வழங்கி வருகின்றது. நுகர்வோரின் நன்மை கருதி  இன்று நள்ளிறவு முதல் (19) மீண்டும் அரிசியின் விலையை குறைக்கப்படுவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோண் தெரிவித்தார்.

இன்று (19) வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொச தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே  இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலுக்கமைய நாடுபூராகவுமுள்ள சதொச கிளைகளினூடாக குறைந்த விலையில் அத்தியவசியப்பொருட்களை வழங்கும் திட்டத்திற்கமைய கடந்த வாரம் 500 பொருட்களுக்கு விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன் பிரகாரம் சதொச நிறுவனத்தில் வழமைக்கு மாறாக நுகர்வோர் ஆர்வம் காட்டி வருவதாகவும் விற்பனையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஏற்பட்ட வரட்சியினால் அரிசி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்த நிறுவனத் தலைவர் வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் அனுமதியுடன் 50 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்து தற்போது ஒரு இலட்சம் கிலோ அரிசி முதற் கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்றார். இனிவரும் காலங்களில் சாதாரண விலையில் நாடு பூராகவும் அரிசியினை விற்பனை செய்ய முடியுமென சதொச நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இன்று நள்ளிரவு முதல் அரசியின் விலை பின்வருமாறு வருகின்றது.

வெள்ளை அரிசி     – 65

நாட்டு அரிசி        – 73

உடைந்த அரிசி      – 60

சம்பா                – 80

(பரீட் இஸ்பான்)

 

 

 

Related Post