கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைப் பேரவை கல்வி அமைச்சு மற்றும் யுனஸ்கோ
ஆகியவற்றுடன் இணைந்து பாடசாலை மாணவர்களுக்கு கைவினைப் பொருட்களை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டமொன்றை இன்று காலை (2017.03.06) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பேரவையின் தலைவி ஹேஸானி போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வியமைச்சர் அகில விராஜ்காரியவசம் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த வருடம் அருங்கலைகள் பேரவை நடைமுறைப்படுத்திய முதல் கட்ட வேலைத்திட்டத்தில் நாடாளவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40000 மாணவர்கள் பங்கேற்று பயிற்சிகளை பெற்றிருந்தனர். பயிற்சி பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட, மிகவும் நேர்த்தியான 800 மாணவர்கள் இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
வடக்கு கிழக்கு உட்பட 112 நிலையங்களில் 21 வகையான கைவினைப் பொருட்களில் இந்த மாணவர்கள் தமது பயிற்சியைப் பெற்று வருகின்றனர். கல்வியமைச்சின் பாடத்திட்டத்தில் கைவினைப் பொருட்கள் என்ற பாடப்பரப்பும் உள்ளடக்கப்படுவதற்கான முன்மொழிவுகள் உள்ளனர்.
இன்றைய நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன, லக்சல நிறுவன தலைவர் இஸ்மாயில் உட்பட அதிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.