Breaking
Sun. Dec 22nd, 2024
– மௌலவி முஹம்மட் றிஸ்வி (அல்-அஷ்ஹரி) –
பொலன்னறுவை மாவட்டத்தில் கதுருவெல குசும்கம எனும் பிரதேசத்தில் பொது நோக்காக சுமார் 2 மாதமாக தமது பொதுச் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள அர்-றஹ்மா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்துள்ள மற்றுமொரு செயற்பாடாக தமது ஊரிலுள்ள இளம் மாணவ மாணவிகளுக்கு அடிப்படையான மார்க்க கல்வியை கற்றுக்கொடுக்கும் குர்ஆன் (மக்தப்) மதரசாவிற்கான அனைத்து குறைகளையும் தங்களால் முடியுமான வரை நிறைவு செய்து இலவசமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பிள்ளைகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிறைவடைந்தது. இதில் மிகவும் வறிய நலையில் நிலையில் உள்ள அரு குடும்பத்திற்கு பண வதவியும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ் ஏற்பாட்டிற்கு பிரதம அதிதியாக பள்ளி நிறுவாகிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்வை சிற்நத முறையில் நடத்துவதற்காக ஆலாசகர் முஹம்மத் நஸ்றுதீன் மற்றும் முஹம்மட் கபீல், மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியரும் பள்ளிப் பொருப்புதாரியுமான மொளலவி நாசர்தீன் (ஹசனி) அவர்களும்  மௌலவி முஹம்மட் றஸ்மி (மஜீதி) அவர்களும் மும்முரமாக ஈடுபட்டனர். இவர்களுக்கு எமது அர்-ரஹ்மா குழு நன்றி தெரிவிககின்றது.

By

Related Post