Breaking
Fri. Nov 15th, 2024
-A. அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Turkey-
சமகால அறிஞர்களில் நான் பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட அறிஞர்களை வாசித்துள்ளேன். அவர்களின் சிந்தனை செல்நெறிகளில் காணப்பட்ட சமூக அக்கறைகளையும் தியாக உணர்வுகளையும் கண்ட பின் அவர்களில் உள்ள முரண்பட்ட நிலைகளை மாத்திரம் வைத்து அவர்களை அனுக என்னால் முடியவில்லை.
நான் அதிகம் முரண்படும் உஸ்தாத் மௌதூதி,சிந்தனை சிகரம் அஸ்ஷைக் ரஷீத் ரிலா,முஹம்மத் அல் கஸ்ஸாலி,கலாநிதி முஸ்தபா மஹ்மூத் போன்றவர்களை இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு சேவையாற்றியவர்கள் என்றே கருதுகிறேன்.
இது ஒரு பக்கம் இருக்க ஏகத்துவ கொள்கையில் உறுதியான அறிஞர்கள் வட்டத்தில் இமாம் அல்பானி,ஷைக் பின் பாஸ்,இமாம் உதைமீன் போன்றவர்களை சமகால இமாம்கள் என்று கருதுவதில் எந்த தயக்கமும் எனக்கில்லை.
மேலே குறிப்பிட்ட இருசாரார் சிந்தனையை உள்வாங்கிய ஒருவராகவே அறிஞர் பி ஜே அவர்களை நான் கருதுகிறேன்.ஆன்மீக சிந்தனையுடன் மட்டும் நின்று கொள்ளாது முஸ்லிம் சிறுபான்மைகளுக்காக குரல் கொடுப்பதில் இருந்து கொள்கை பேதம் பாராது அனைத்து முஸ்லிம்களுக்காவும் குரல் கொடுத்து பதவிகளை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு எங்கேயோ ஒரு இடத்தில் ஒதுங்கி நிற்கும் மனிதனை காண்பது அரிதே. .
தனக்கு ஆயிரம் பேர் சேர்ந்தாலே அரசியல் நடத்தி கட்சிக்கு தலைமை தாங்கும் உலகில் பல லட்சம் மக்களை சம்பாதித்தும் எந்த ஒரு அரசியல் பதவியோ,ராஜ தந்திர பதவியோ எடுக்காமல் சாதாரண ஒரு மனிதனாக தேங்காய் விற்கும் தொழில் முதல் அச்சகம் நடத்தும் தொழில் செய்தே தனது வருவாயை பெற்றுக்கொண்டு இன்றுவரை வாடகை வீட்டில் வாழ்ந்து வரும் பி ஜே யை பற்றி எழுதுவதில் பலருக்கு படிப்பினை இல்லாமல் இருக்க முடியாது.
பி ஜே யின் படைப்புகள்
அல் குர்ஆன் தமிழ்-தப்சீருடன்
அல்குர்ஆன் ஆங்கில மொழிமூலம்
அல்குர்ஆன் சிங்கள மொழிமூலம்
புகாரி தமிழில்
திர்மிதி தமிழில்
உணர்வு (சமூக அரசியல் வாராந்த இதழ்)
ஏகத்துவம் (மாதாந்த ஆய்வு சஞ்சிகை)
முஸ்லிம் பெண்மணி (பெண்களுக்கான மாதாந்த ஆய்வு சஞ்சிகை)
தமிழ்,ஆங்கிலம்,உர்து,சிங்களம் மொழிகளில் எழுதிய சுமார் 100 நூல்கள்.
இப்படி பல படைப்புகளை எழுத்துலகுக்கு கொடுத்த பி ஜே அவர்கள் ஹிந்துமதம்,கிறிஸ்தவம்,காதியானிகள்,அத்துவேதிகள் என பல முரண்பட்ட மதங்கள்,சித்தாந்தங்கள்,கொள்கை பிரிவினருடன் விவாதங்கள் செய்தவர் என்பதோடு பல நூறு தலைப்புகளில் பல ஆயிரம் ஓடியோ கிளிப்கள் வெளியிட்டு தமிழ் நூலக காப்பகத்தில் அதிகாரம் செலுத்தும் எழுத்து புரட்சியை மட்டுமல்ல சொற்புரட்சிக்கும் உதவி செய்தவர் என்பதில் சந்தேகமில்லை.

By

Related Post