Breaking
Mon. Dec 23rd, 2024
மீன்பிடி அமைச்சு அலங்கார மீன் ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைய மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.
றுகுணு பல்கலைக்கழகத்தின் மீன் உயிரியல் பிரிவின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படும். மாத்தறை பொல்ஹேன, மடிக, ஹிக்கடுவ, உணவட்டுண ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன.

அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240 கோடி ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது. இதனை அடுத்த வருடமளிவில் இருமடங்காக அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

By

Related Post