அல்கொய்தா இயக்கம் இந்தியாவில் தனது கிளையை தொடங்குவதாக அறிவித்து இருப்பது பற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் கெய்ட்லின் கெய்டன் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில், நிருபர்களிடம் கூறுகையில்,
இது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை- என்றார்.
அவர் மேலும் கூறுகையில், ‘‘அல்கொய்தாவின் இந்த புதிய அறிவிப்பை நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வில்லை. இது தொடர்பான தகவல்களை கவனித்து வருகிறோம். இது இயக்கங்களிடையேயான போட்டியாக கருதுகிறோம். மேலும் அமெரிக்கர்களுக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் கருத வாய்ப்பு இல்லை என்றார்