சனாஸ் முஹம்மத்
கடந்த ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டுவந்ததினால் தான் இன்று 3000 யுவதிகளுக்கு இந்த தையல் இயந்திரங்களை வழங்க முடிந்தது என தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,முன்னாs; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்தின் தேவையுணர்ந்து எமது சமூகத்தின் நன்மைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அனைத்து மக்கள் பிரதி நிதிகளுடன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்த போது இந்த தையல் இயந்திரங்கைளை வறிய மக்கள் பெற்றுக்கொள்ள விடாமல் சில அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
வவுனியா மாவட்டத்தில் மாங்குளம்,நேரிய குளம் அல்ஹாமிய்யா மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு இன்று உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் அங்கு பேசுகையில் கூறியதாவது –
கடந்த அரசில் கைதொழில், வணிகத் துறை அமைச்சராக இருந்த போது தான் இவ்வாறான யுவதிகளுக்கான தையல் பயிற்சியினை எனது அமைச்சின் கீழ் கொண்டுவந்தேன்.எனக்கு முன்னர் இந்த அமைச்சு பொறுப்பை வைத்திருந்தவர்கள் இது தொடர்பில் சிந்தித்ததில்லை.
ஆனால் வடக்கில் கடந்த 30 வருடகாலமாக காணப்பட்ட யுத்தம் எமது மக்களது வாழ்வில் பல்வேறுபட்ட துன்ப கரமான நிகழ்வுகளை ஏற்படுத்தியது.இழக்க கூடிய அனைத்தையும இழக்க நேரிட்டது.
அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்த யுத்தம் முடிவுக்கு வந்த போது,வடமாகாண மக்களுக்கு எதையெல்லாம் பெற்றுக்கொடுக்க முடியுமே அதனை எவ்வித சுயநலத்தன்மைகளும் இன்றி நேர்மையாக பெற்றுக்கொடுத்தேன்.
அப்போதைய சூழலில் முஸ்லிம் கிராமங்களின் தேவைப்பாடுகளை விட சகோதர மக்களின் தேவைப்பாடுகளை இனம் கண்டு அதனை பெற்றுக் கொடுத்தேன்,கற்றல் செயற்பாடுகள் முதல் அடிப்படை வாழ்வாதார வசதிகளையும் பெற்றுக்கொடுத்தோம்.ஏன் நான் ஒரு இனவாதியோ,மதவாதியோ அல்ல என்பதை இந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதன் பிற்பாடு இந்த வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய எனது உதவிகளை வழங்குகின்ற போது என்னை மிகவும் கடுமையாக தாக்குகின்றனர்.இனவாதிகள் ஒருபுறம்,மதவாதிகள் மறுபுறம்,அதற்கு மேலால் சில அரசியல் வாதிகள்,அவர்களுடன் தொலைக்காட்சிகள் சிலவும் எனனை பல திசைகளிலும் தாக்குகின்றனரை்.
இசந்த வறிய மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது இறைவனிடத்தில் மகத்துமிக்கது,அது போல் இறைவனின் நாட்டமின்றி எதுவும்,எவர் எந்த சதி திட்டங்களை போட்டாலும்,நடக்காது என்கின்ற உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்ற வகையால் எத்தனை அம்புகள் என்னை நோக்கி வந்தாலும் அதற்கு நாம் அல்லாஹ்வின் துணைாயல் அச்சம் கொள்ளத் தேவையிலை்லை என்பதால எதிர் சவால்களை சந்தித்து வருகின்றோம்.
இந்த தையல் பயிற்சி திட்டம் என்பது இன்று ஆரம்பித்ததொன்றுமல்ல,சில வங்குரோத்து அரசியல்வாதிகள் இதனையும் விமர்சிக்கின்றனர்.நாம் இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பங்களை பார்க்கின்ற போது,அவர்கள் வறியவர்களா ?
என்று மற்றும் தான் பார்த்தோமே ஒழிய எவ்வித அரசியல் நிரங்களை பார்க்கமில்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்..
இந்த மாவட்ட மக்கள் அரசியல்,மற்றும் கல்வி,பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணுவதை சகிக்காத அரசியலை வியாபாரமாக மாற்ற நினைக்கின்ற அரசியல் வியாபாரிகளால் ஒரு போதும்,ந்த சமூகத்தின் யதார்த்தமான தேவைகளை அறிந்து கொள்ள முடியாது என கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன்,எதிர்காலத்தில் இந்த தையல் பயிற்சிகளை பெற்றுக்கொண்ட மாணவிகளுக்கு எமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களை தொடர்புபடுத்தி தையல் உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் இணைப்பு செயலாளர் முத்து முஹம்மத்.,எம்.ஆரிப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.