Breaking
Fri. Nov 15th, 2024

முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோரை பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி (ஸல்) ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்புமாறு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் அசாத் சாலி தெரிவித்த கருத்து மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா செய்த முறைப்பாடு தொடர்பிலேயே இந்த சவால் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் “முஹம்மத் நபி (ஸல்) ஊடாக அல்லாஹ்வுக்கு அனுப்பவும்” என ஞானசார தேரர் தெரிவித்த கருத்தின் மூலம் அல்லாஹ்வுக்கு அவமதிப்பு ஏற்படுவது எவ்வாறு என அவர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனவும், அல்லாஹ் தொடர்பிலும், குர்ஆன் தொடர்பிலும் எவ்வேளையிலும் தாம் விவாதத்துக்கு தயார் எனவும் பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கை முஸ்லிம்கள் பௌத்த தேரர்களினால் கொடுமைப்படுத்தப்படுவதாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவினால் கடந்த வாரம் உலக இஸ்லாமிய சம்மேளனம் (OIC) இற்கு வழங்கிய முறைப்பாடினால் நாட்டின் பெரிய இடம் ஒன்று கோபமடைந்துள்ளதாகவும், ஆகவே பொய் அவதூறுகளை பரப்பித்திரிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளதாக, குறித்த அமைப்பின் ஆதரவு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. fn

By

Related Post