கடந்த சில நாட்களாக பலஸ்தீனில் பலஸ்தீனர்களுக்கும் இஸ்றேலியர்களுக்கும் இடையே அக்ஸா பள்ளியை மையமாக கொண்டு தொடர்ந்து பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது.
இளைஞர்களை பள்ளியில் தொழுகைக்கு அனுமதிக்க மாட்டோம் முதியவர்களை மட்டுமே அல்அக்ஸா பள்ளிக்கும் அனுமதிப்போம் என கூறி இஸ்றேல் அடாவடிதனம் செய்து வருகிறது.
கடந்த வெள்ளியன்று பலஸ்தீன இளைஞர்கள் இந்த தடையை தகர்த்து எறிந்தனர் 30 ஆயிரத்திர்கும் அதிகமான பலஸ்தீன முஸ்லிம் இளைஞர்கள் அக்ஸா பள்ளிக்குள் தொழுகைக்காக நுழைந்தனர் இதனை தொடர்ந்து இஸ்றேல் பள்ளிக்குள் நுழைவதர்கு விதித்திருந்து தடையை வேறு வழியின்றி விலக்கி கொண்டது.
30 ஆயிரம் பலஸ்தீன இளைஞர்களுக்கு மத்தியில் உரை நிகழ்த்திய அல்அக்ஸாவின் இமாம் முஹம்மது ஹீசைன் அவர்களின் உரையில் அனல் பறந்தது.
அல்அக்ஸா பள்ளியின் ஒரு கல்லைகூட இஸ்றேலுக்கும் விட்டு தரமாட்டோம் அல் அக்ஸா பள்ளியின் அனைத்து பகுதிகளும் உலக முஸ்லிம்களுக்கு சொந்தமானது என சூழுரைத்த இமாம் அந்த பணியை பாலஸ்தீன் இளைஞர்கள் செவ்வன செய்து முடிப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பள்ளியை சுற்றி இஸ்றேலின் இராணுவம் குவிக்க பட்டிருந்த நிலையிலும் யாருக்கும் அஞ்சமலல் இறைவனுக்கு மட்டுமே அஞ்சி இஸ்றேலுக்கு எதிரான போர் பிரகடனத்தை இமாம் வெளியிட்டது இஸ்றேல் துருப்புகளை அதிர வைத்தது