எம்.ரீ.எம்.பாரிஸ்
மட்டக்களப்பு கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் வாழ்வுக்கு வழிகாட்டும் நகர அழகுபடுத்தல் நிகழ்ச்சி திட்டத்திற்கமைவாக சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வணிகஸ்தாபனம் நிறுவப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ்.ஹாரூன்(ஸஹ்வி) தலைமையில் நேற்று (31.03.2015) இடம் பெற்றது.
அல்-கிம்மா நிறுவனத்தின் மக்கள் நலதிட்டங்களின் ஓர் அங்கமாக ஓட்டமாவடி ஆற்றங்கரைவீதி மற்றும் கொழும்பு பிரதான வீதியில் 5 மில்லியன் ரூபாய் செலவில் 25 சிறு கடைகள் நிறுவப்பட்டு சுயதொழில் ஆர்வமிக்க முயற்சியாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதமஅதிதியாக சமூர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு கடைத்தொகுதிகளை திறந்து பயனாளிகளிடம் உத்தியோக பூர்வமாக திறப்புக்களையும் அதற்கான பத்திரங்களையும் வழங்கி வைத்தார்.
இதன் போது நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர்,செயலாளர் ஐ.எம்.றிஸ்வின்,பிரதியமைச்சின் இனைப்பாளர்களான எஸ்.எம்.அக்பர்,லெப்பைஹாஜி,நிறுவனத்தின் ஆலோசகர் எஸ்.எல்.எம்.கனீபா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.