Breaking
Tue. Jan 14th, 2025

அல்-கெய்தாவின் அச்சுறுத்தல் தெற்காசியாவுக்கு மட்டுமல்ல முழு உலகிற்கே அச்சுறுத்தலாகும். அத்தோடு இது உலக முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பமாகும் என பொது பல சேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மற்றும் இங்கு வரும் பாகிஸ்தானியர்கள், ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடும் சோதனைக்கு உள்ளாக்குவதோடு துறைமுகத்திற்கு வரும் கொள்கலன்களை சோதனை செய்ய விசேட நடவடிக்கைகளை முடுக்கி விவிட வேண்டும் என பொது பல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும். அதே போன்று தான் அல்கைதா அமைப்பு இன்று செயற்படுகின்றது. இவ்அமைப்பு விடுத்துள்ள அச்சுறுத்தல் தெற்காசியாவுக்கு மட்டுமல்ல முழு உலகிற்குமே ஆபத்தானதாகும்.

அத்தோடு இது உலக முஸ்லிம்களின் அழிவின் ஆரம்பமாகும். இந்தியாவின் ஸ்திரத் தன்மையை சீர்குலைத்து அந்நாட்டை துண்டு துண்டாக பிரிக்கவே அல் கைதா முயற்சிக்கின்றது. நல்ல வேளை மோடி போன்ற சாதுரியமிக்கவர் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார். (OU)

இந்தியாவுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அது எமது நாட்டை பாதிக்கும். னவே பாதுகாப்பு பிரிவினர்  உளவுத் துறையினர் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Post