Breaking
Wed. Nov 20th, 2024

இந்திய துணைக்கண்டத்திலும் அல்-கொய்தா அமைப்பின் பிரிவை அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அல்-கொய்தா, தீவுக்குள் நுழைவதை தடுப்பதற்கு விஸா கட்டுப்பாடுகள் மற்றும் விஸா மீளாய்வுகளை இலங்கை பரிசீலிக்க உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல்-கொய்தா ஆதரவு, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்டு, அநீதி இழைக்கப்பட்ட எங்கள் அமைப்பினை இந்திய துணைக்கண்டத்திலும் ஏற்படுத்துவோம். தவிர பர்மா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் , இந்தியாவில் அசாம், குஜராத் , காஷ்மீர் ஆகிய இடங்களிலும் கிளையை நிறுவுவோம்  அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஆசிம் உமர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post